- ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா திடீர் தடை விதித்துள்ளது.
- பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான சீரிஸ், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் அதிகாரி சமீர் வான்கடே டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை எங்களுக்கு வழங்க வேண்டும், என்று அமெரிக்க அதிபரிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
- கல்வியில் தமிழகம் பெற்ற எழுச்சியை பிற மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. அங்கு செயல்படுத்த ஆய்வு செய்கின்றன, என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
- முதலீடு குறித்து வெள்ளி அறிக்கை கேட்டால் அமைச்சர் டிஆர்பி ராஜா வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். திமுக ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி அவர் நிரூபித்துவிட்டார், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டு, ஒரு போட்டோவை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் போட்டோவில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.
- ஐஎன்எஸ் எனப்படும் ‘ இந்திய செய்தித்தாள் சொசைட்டி’யின் தலைவராக சன்மார்க் என்ற ஹிந்தி நாளிதழின் விவேக் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
- முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
- சிந்து நதிநீரை, சுரங்கம் அமைத்து வட மாநிலங்கள் பலன்பெறும் வகையில், இமயமலையில் உருவாகும் பியாஸ் நதியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
- சட்ட விதிகளுக்கு புறம்பாக, தேர்தல் நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு, 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.