- இபிஎஸ் அதிமேதாவித்தன அரசியல் செய்தார். அவர் பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
- கமிஷனுக்காக அதிகாரியை திமுக நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
- தென்காசி சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- அடுத்த பத்து வருடங்களுக்கு மாணவர்கள் திறம்பட படிக்கவும், நாட்டிற்கு சேவை செய்யவும் உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். இதற்கான ஆலோசனை நடந்து வருகிறது’ என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
- இந்தியா ஒரு போதும் போரை விரும்பவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால், பின்வாங்காது, பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
- தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 6.16 கோடி பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
- கவுகாத்தியில் நடைபெறும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கோப்பை கபடி போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதால், கண்ணூர்-அபுதாபி பயணிகள் விமானம் ஆமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது.
















