- தவெக மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால் 10,000 பிளாஸ்டிக் சேர் உடைந்து சேதமானதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உடைந்த சேர்களால் அந்த மைதானமே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
- திமுக ஆட்சியில் 15,380 மூட்டை அரிசி வீணாகி விட்டதாக தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
- தான் நீதிபதியாக இருந்தபோது தன்னை பார்த்து கண்ணடித்த பெண் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினேன், என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் மன்னிப்பு கேட்டதுடன், அந்த பதிவை நீக்கிவிட்டார்.
- ஊழல் மற்றும் குற்ற சம்பவங்கள் ஆகியன மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறி விட்டது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- நடிகர் என்ற நிலையில் இருந்து அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னமும் தவெக தலைவர் விஜய் உயரவில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
- ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா நகரையே அழித்துவிடுவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- இந்தியா மீது கூடுதலாக வரி விதிப்பை கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
- அமெரிக்கா உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய முயற்சித்த போதிலும் , ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
- தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை ஆய்வகமான ‘பாரதிய அந்தரிக்ஸ்’ நிலையத்தின் மாதிரியை டில்லி பாரத் மண்டபத்தில் இஸ்ரோ காட்சிக்கு வைத்துள்ளது. நாளை 23ம் தேதி தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இந்த ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது.
- உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. ரீல்ஸ் பார்ப்பது அனைத்தும் உண்மை என நம்ப வேண்டாம், என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.















