- இன்று மாலை தவெக-வின் வெற்றி பேரணியில் தமிழ்நாடு மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது.
- ரூ.85,000 கோடியில் இந்திய விமானப் படைக்காக 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- டிரம்பின் வரி அச்சுறுத்தல், பொருளாதார தடைகள் இந்தியா உடனான எங்களது உறவை பலவீனப்படுத்தாது என ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்தார்.
- குற்ற வழக்குகளில் சிக்கும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
- கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் சட்டமசோதா குறித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியுள்ளார்.
- அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.
- சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம் கொண்டு வருவதற்கு, ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
- அரசியல்வாதிகள் சிறையில் இருந்துகொண்டு அரசு நடத்துவது சரியானதா என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
- கவர்னர் என்பவர் வெறும் தபால்காரர் அல்ல. அவர் மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், என்று, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில், மத்திய அரசு வக்கீல் வாதிட்டார்.