- அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது,என முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
- இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவக்குவது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.
- நீர் முதலீட்டுக்கான உலகளாவிய கவுன்சில் என்ற அமைப்பில் உறுப்பினராக பிரதமர் மோடி மற்றும் பிற ஜி – 20 தலைவர்களுக்கு தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா அழைப்பு விடுத்துள்ளார்.
- திமுக ஆட்சி வெண்டிலேட்டரில் இருக்கிறது. மக்கள் கைவிட்டால் ஆட்சி குளோஸ் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.
- இந்தியா பொருட்களையே வாங்குவோம். பயன்படுத்துவோம் என அனைவரும் உறுதி ஏற்போம், என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
- சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும், வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு மிக்க அந்நியச் செலாவணியை பாதுகாக்கவும் நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை அமைந்துள்ளது.
- நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், விமானப்படை, கடற்படையினருக்கு வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருது, வாயு சேனா பதக்கம், கீர்த்தி சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- போரை தூண்டும் வகையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கிஸ்தான் தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அந்நாட்டின் தவறான நடவடிக்கைகளுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
- தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
- அலாஸ்காவில் நடக்கும் டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு கூடுதலாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 August 2025 | Retro tamil
