- ‘ஏஐ’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- உக்ரைனுடனான அமைதிப்பேச்சு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமைதி பேச்சுக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் குற்றஞ்சாட்டினார்.
- ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தில், வழக்கறிஞர் ஒருவர் பாகிஸ்தானை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என விமர்சித்து அந்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார்.
- திமுக குடும்பம் கேபிள் டிவி நடத்துகின்ற காரணத்தினால், அவர்கள் அரசு கேபிள் டிவியை முடக்க வேண்டும் என்றே செயல்படுகிறார்கள், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி நேற்று ( செப்.,12) இரவு பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
- வெறும் இரண்டு சீட்டுக்காக திமுகவுடன் நாங்கள் இருக்கவில்லை. அந்த இரண்டு சீட்டை கூட பெற முடியாதவர்கள் இருக்கின்றனர், என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- சுரங்க திட்டங்கள் விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்க தேவையில்லை என்ற முடிவை கைவிடுமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
- வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார்.
- நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
- ஓட்டுத் திருட்டை தடுக்காவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.















