- திமுக கூட்டணியை நாங்கள் உடைக்கத் தேவையில்லை. நீங்களே உடைந்து போவீர்கள். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ‘கிராமங்களை நோக்கி’ என்ற பிரசார பயணத்தை, செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராமத்தில் துவக்கினார்.
- தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு,’ என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது ஏன் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வருக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 23ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
- நாடு முழுவதும் உள்ள 40 மாநில கட்சிகள் 2023 -24ம் நிதியாண்டில் ரூ.2,532.09 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. இவற்றில் 70 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
- ராணுவ அதிகாரி உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ரேடாரில் இலக்குகளை தானாக கண்டறியும் அமைப்புக்கு இந்திய ராணுவம் காப்புரிமை பெற்றுள்ளது.
- கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையான்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது எனக்கூறியுள்ளார்.
- எஸ்பிஐ வங்கி ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
- நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) வரும் அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 SEP 2025 | Retro tamil
