- அமைதிக்காக அவர் நிறைய செய்கிறார் என டிரம்புக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு தெரிவித்துளார்.
- அதிமுக கட்சி அலுவலகம் அமித்ஷா வீட்டில் இயங்குகிறது என சொல்லும் துணை முதல்வர் உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பு இல்லை.தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் கண்டிப்பாக வெளியே சொல்வோம் என தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
- இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளில் ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடக்கம். நேபாளத்தை சேர்ந்த அவர் விவசாய பயிற்சிக்காக சென்ற போது சிக்கிக் கொண்ட அவர், விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா – ஆப்கன் உறவுகள் வரலாற்று சிறப்பானது, என்று ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
- திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்துள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
- அக்.,16 முதல் 18 ஆம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
- கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
- சட்டவிரோத ஊடுருவலையும், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும், அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. இது தேசிய பிரச்சனை, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.