- அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்திய சோதனையில், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பைப் பாராட்டினார். அவர், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்’ என்று கூறினார்.
- காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
- ஹரியானாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதி உச்சத்தில் உள்ளது தெரியவந்துள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
- கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் ஜெட் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
- தெருக்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது தவறு. மீண்டும் நாங்கள் ஆட்சி அமைந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும், என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? வேண்டுமானாலும் வரலாமே. தலைவர்கள் தினமும் வருகின்றனர், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- தமிழக காவல்துறையில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதா? விசாரணை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- முன்னாள் துணைவேந்தர், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களை வேட்பாளராக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறக்கியுள்ளார்.