- பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராகுலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று( டிச.,10) மதியம் சந்தித்தார். 88 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது,மத்திய அரசின் தலைமை தகவல் கமிஷனர் மற்றும்8 தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ராகுல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
- பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கு, இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
- பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு குறித்து, பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று(டிசம்பர் 10)போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
- பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு காரணமாக அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
- மொழி அரசியலை ஒழிக்க வேண்டும், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதனை, தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டுவதாகவும், பொதுவெளியில் அவதூறு பரப்புவதாகவும், நடிகையும், பாஜ நிர்வாகியுமான கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார்.
- திமுக அரசின் ஊழல்களை, அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்கும் போக்கை திமுக அரசு கைவிடுவதாக தெரியவில்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- ஆர்எஸ்எஸ் ஹிந்து சமுதாயத்தினரை முன்னேற்றுவதற்கான அமைப்பு. வேறு எந்த மதத்துக்கும் எதிரானது கிடையாது,” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய விரும்புகிறார்கள், என லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
















