- பார்லி.,யில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில், மறைந்த காங்., பிரதமர் நேருவின் உண்மையான முகம் வெளிப்படும், என, பா.ஜ., லோக்சபா எம்.பி., சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
- பாலியல் புகாரால் பாதிரியார் நீக்கப்பட்ட நிலையில், சர்ச்சில் நடந்த பிரார்த்தனையின் போது, இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- பள்ளி வளாகங்களுக்கு விதிக்கப்பட்டது போல, தியேட்டர்களுடன் கூடிய மால்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கும், 7 மீட்டர் அகல சர்வீஸ் சாலை கட்டுப்பாடு வர உள்ளது.
- ராணுவ வீரர்களுக்கு நாம் துணை நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில், ராணுவத்தினரின் கொடி நாள் நிதிக்கு, அனைவரும் முழு மனதுடன் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, பொதுமக்களுக்கு கவர்னர் ரவி வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.
- சேதமான சாலைகளை, ஜனவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு கெடு விதித்துள்ளது.
- உள்நாட்டு ராணுவ உற்பத்தி, 2014ல், 46,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ராணுவ பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு, 24,000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது, என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- ஜப்பான் போர் விமானங்கள் மீது, எப்.சி.ஆர்., எனப்படும் ஆயுத கட்டுப்பாடு ரேடாரை பயன்படுத்தி சீனா அச்சுறுத்தியதாக அந்நாடு குற்றஞ்சாட்டி உள்ளது.
- மத்தியில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்ற தி.மு.க.,வின் அடிமை சாசனத்தை உதயநிதி படித்துப் பார்க்க வேண்டும்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
- பா.ம.க.,வின் தேர்தல் பயணத்தை, ஜி.கே.மணியை பயன்படுத்தி, தி.மு.க., திசை திருப்ப முயற்சிக்கிறது, என பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டினார்.














