- போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவ, நிவாரணப் பொருட்களுடன் கப்பலில் சென்ற சமூக செயற்பாட்டாளர்கள் 171 பேரை இஸ்ரேல் நாடு கடத்தியது.
- ஆப்ரிக்க மன்னர் ஒருவர், 15 மனைவியர், 30 குழந்தைகள், 100 வேலையாட்கள் என, 150 பேர் அடங்கிய பரிவாரங்களுடன் வந்திறங்கியதால் அபுதாபி விமான நிலையம் ஸ்தம்பித்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகுர்னு, பதவியேற்ற சில வாரங்களிலும் , அமைச்சரவையை நியமித்த சில மணி நேரங்களிலும் பதவி விலகியுள்ளார்.
- பாகிஸ்தானின் தற்போதையை சூழலை பார்க்கும் போது எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் திமுக- அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் வளாகத்திற்குள் தலைமை நீதிபதி கவாய்க்கு எதிராக நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல், நமது நீதித்துறை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்பி சோனியாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
- தவெக தலைவர் விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
- அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து அக்.,23க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 07 Octo 2025 | Retro tamil
