- பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகத்தை இருண்ட சூழலில் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் நிறுத்தி உள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
- சென்னையில் நேற்று பெய்த கனமழையால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்புக்குள்ளானது.
- மக்களைக் காக்க வேண்டிய போலீசார், திமுகவினர் குற்றம் புரியும் போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜகத் துறையாகவும் மாறுவது ஏன்? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு இன்று விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுக, விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
- தவறு செய்தவர்களை காப்பாற்ற, பா.ஜ., ஒன்றும் நீதிமன்றம் இல்லை; ஒரு அரசியல் கட்சி, என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.
- ஒடிசாவில் இருதரப்பினரிடையே வெடித்த மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதன் காரணமாக, கட்டாக்கில் 24 மணிநேரத்திற்கு இணைசேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா, பள்ளி மாணவர்களுக்கான, ‘விக்ஷித் பாரத் கட்டமைப்பு’ இயக்கத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மத்திய அமைச்சர் அமித்ஷா கேரளா வந்தபோது குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.