- திமுக ஆட்சியில் அமைதியான தமிழகத்தின் அடையாளமே மாறிப்போய் விட்டது என மத்திய அமைச்சர் முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
- திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு, முதல்வர் ஸ்டாலின் திசை திருப்ப பார்க்கிறார்’ என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
- தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: ஆர்எஸ்.எஸ் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதூறாக கருத்துக்களை தெரிவித்து, நூறாண்டு கண்ட சேவைக்கு இலக்கணமான உலகம் போற்றும் தலைசிறந்த மனிதநேய இயக்கத்தின் நன்மதிப்பை, பெருமையை, வரலாற்றுச் சிறப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறாக பேசிய முதல்வர் ஸ்டாலின் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
- கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 68 பேர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
- தனது மகள் ஆன்லைனில் விளையாடி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டார், என பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கூறினார்.
- இஸ்ரேலுடன் ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு கடைசி வாய்ப்பு. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அவர்கள் கையெழுத்து போட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
- அரசு நிதியுதவி தடைபட்டதால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தற்காலிகமாக முடக்கத்திற்கு ஆளாகியுள்ளது.
- அமெரிக்காவில் கொரோனா வைரசின் புதிய உருமாறிய வடிவமான ‘ஸ்ட்ரேடஸ்’ வேகமாக பரவி வருகிறது.