- ‘பார்க்’ எனப்படும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எனக் கூறிக் கொண்டு, முக்கிய அணுசக்தி தகவல்களை வெளிநாடுகளிடம் பரிமாறி, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவரை, மும்பையில் போலீசார் கைது செய்தனர்.
- அந்தமான்நிகோபர் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
- தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது, என்று, பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
- பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள், மதுபானத்தின் மதிப்பு 108 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
- சான்பிரான்சிஸ்கோவிலில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மங்கோலியாவுக்கு திருப்பி விடப்பட்டு, தரையிறக்கப்பட்டது.
- ஹமாஸ் பயங்கரவாதிகள், தங்களிடம் இருந்த 3 பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைத்தனர். பதிலுக்கு பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் ஒப்படைத்தது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பணி ஜனநாயகத்துக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- ஏர் இந்தியா விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்த நிலையில், நான் ஒருவன் மட்டுமே தப்பினாலும், உடல், மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன் என விஸ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
- முதல் முறையாக ஓட்டளிப்பவர்கள், பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி அரசு அமைய ஓட்டளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
- பாகிஸ்தானும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. நாங்களும் அதை நடத்த போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

















