- இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று (டிசம்பர் 04) இரவு டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதேநேரத்தில் ராம ரவிக்குமாரும் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
- கார்த்திகை தீபம் என்பது ஹிந்துக்களின் பண்டிகை அல்ல. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக விஷத்தை கக்கியுள்ளனர் திருமா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.
- திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே இருதரப்பு உறவில் மேலும் சமநிலை வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
- எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் கூறும் குற்றச் சாட்டுகள் உண்மை கிடையாது, தவறானது என பாஜ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- 2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்தார்.
- பார்வை இழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரான லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வழங்கினார்.















