- இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்திருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு, மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதி உள்ளார்.
- இந்தியா – சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 26 ம் தேதி முதல் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.
- ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்பு கொடுக்கும் முதல்வர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும். ஒரு நபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
- ரஷ்ய ட்ரோன்கள் எந்த நேரத்திலும் எந்த ஐரோப்பிய நாட்டையும் தாக்கக்கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
- வாகன சோதனை என லாரியை நிறுத்தி, அதில் இருந்த இரண்டு பெண்களை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, தாய் கண் முன், 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர், நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
- சென்னையில் நேற்று (அக்., 02) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் மாலையில் அதே அளவு விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- விஜய் பேசிய காணொளியை பார்க்கும் போது அவரது இதயத்தில் காயமோ வலியோ இருப்பது போல் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
- சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்கட்டமைப்பு வசதியை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ஏதேனும் அச்சுறுத்தலில் ஈடுபட முயன்றால் இந்தியா தீர்க்கமான தக்க பதிலடியை கொடுக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- ஏஐ மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
- மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.