- நம் நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணியை கைப்பற்ற, ஏழு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.
- கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன, என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- ரஷ்யா டிரோன் அச்சுறுத்தலில் தங்களின் நாடுகளை பாதுகாக்கும் விதமாக, டிரோன் சுவர் எனப்படும் தொடர் சென்சார் பாதுகாப்பு ஏற்படுத்துவது தொடர்பாக டென்மார்க்கில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- கத்தாரை பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன்படி, கத்தார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா போர் அமைதி திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
- வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்திய மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது, என பிரதமர் மோடி பேசினார்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துவதில் ஏமாற்று வேலையை செய்துவருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனையடுத்து துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை திமுக நிர்வாகிகள் போலப், பயன்படுத்தி அரசுத்துறைகள் அனைத்தையும் செயலிழக்க வைத்துவிட்டார்கள், என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.