- தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
- மக்களை கொள்ளையடித்தும், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டும் காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது, என பிரதமர் மோடி பேசினார்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 10 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். நேற்று என்கவுன்டரில் நக்சலைட்டுகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை தேர்தல் பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- இந்திய விமானப்படையில் விமானியாக பணியை தொடங்கியதில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது வரையிலான தனது பணி அனுபவங்களை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பகிர்ந்து கொண்டுள்ளார்.
- தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (செப் 25), “தனிநபர் தாக்குதலில் இபிஎஸ் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
- உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.84,080க்கு விற்பனையாகிறது.
- நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 25 SEP 2025 | Retro tamil
