- போலீசாரை ரவுடி கும்பல் மிரட்டல் விடுக்கும் வீடியோவை வெளியிட்டு,’திமுக ஆட்சியில் இந்த ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள்,” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- ”முதல்வர் ஸ்டாலினை ஓ.பி.எஸ்., எந்த நோக்கத்தில் சந்தித்தார் எனத் தெரியவில்லை. அவருக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- ” பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது பலவீனமா என்பது குறித்து தேர்தலில் தான் தெரியும்,” என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- காவல்துறையையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைத்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை மக்கள் அளிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூலை மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 1.96 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டு(2024) ஜூலை மாதம் வசூலான 1.73 லட்சம் கோடியை விட 7.5 சதவீதம் அதிகம் ஆகும்.
- அரசியலமைப்புகளை அச்சுறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி தந்துள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஓட்டுகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
- விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.