- சென்னையில் இன்று (செப் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கல்வித்துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான ஆசிரியர்கள், ஹைடெக் லேப்களில் வசதி இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
- காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் நடத்திய, ‘டாஸ்மாக்’ நிர்வாகம் நடத்திய பேச்சில், ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. இதனால், அத்திட்டத்தை செயல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
- புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை யாருடைய தலையீட்டாலும் ஒத்தி வைக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
- பிரதமர் மோடி, அவரின் தாயார் ஆகியோரின் ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு காங்கிரசுக்கு பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஆன்லைனில் பணம் அனுப்ப நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.
- கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை செப்.18ம் தேதி முற்றுகையிட போவதாக காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
- சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, துாத்துக்குடிக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.