- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 24 ஆயிரத்து 307 கோடி முதலீடு செய்வதற்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு தென்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
- போர் விமானத்திற்கான 120 கேஎன் (Kilo Newton) திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா – பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.
- சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்ற வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதா ஆன்மா தோல்வியைத் தான் தரும் என மறைமுகமாக செங்கோட்டையனுக்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் சாபம் விட்டார்.
- அடுத்ததாக மலை, கடல் மற்றும் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
- இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு நன்மதிப்பு உள்ளது, இந்தியாவுடன் உறவு வலுப்படும் என்று நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், இடைக்கால அரசு தலைவருமான சுஷிலா கார்கி உறுதி அளித்துள்ளார்.
- இந்தியாவும், மொரீஷியஸூம் அந்தந்த நாடுகளின் கரன்சியை கொண்டு வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று பிரதமர் மோடி கூறினார்.
- வெளிநாடு பயணத்தின் போது, இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல், விதிமுறைகளை தொடர்ந்து மீறுகிறார்”, என சிஆர்பிஎப் புகார் கூறியுள்ளது.
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 SEP 2025 | Retro tamil
