- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக வரும் 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
- தமிழகத்தில் (நவ., 07) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
- சேலம் மாவட்டத்தில் பா.ம.க.,வினர் மோதிய விவகாரத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
- ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், அனில் அம்பானிக்கு 2வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 14ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
- விண்வெளி துறையில் இந்திய தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவு உள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- ஆன்லைன் சூதாட்ட செயலியை அறிமுகப்படுத்தியது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ்ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.54 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
- ‘ராகுலின் ஹைட்ரஜன் குண்டு வெறும் ஊசி பட்டாசு’ என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் விமர்சித்துள்ளார்.
- பீஹாரில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு கொண்டுள்ளனர். அவர்களால் மக்கள் நலனில் அக்கறை செலுத்த முடியாது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















