அம்மா உணவகத்தை ஆய்வு செய்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். திருப்பதி பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி நலன்களை கேட்டறிந்தார்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். திருப்பதி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகரக் கழக செயலாளர்கள் கோகுல், அச்சுதன், நபீஸ், ஃபைரோஸ் உள்ளிட்ட நகர நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
மேலும அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், சுகாதார வசதிகள், சமையல் அறையின் பராமரிப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு உணவருந்த வந்திருந்த பொதுமக்களிடம் உணவின் தரம், சேவை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அவர்களின் கருத்துகளையும் பெற்றார்.
தொடர்ந்து, “மக்களோடு மக்களாக” என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில், டாக்டர் திருப்பதி அம்மா உணவகத்தில் பொதுமக்களுடன் இணைந்து அமர்ந்து உணவருந்தினார். இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, சட்டமன்ற உறுப்பினரின் எளிமையான அணுகுமுறையை பாராட்டினர்.
மேலும், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
