குவாடலஜாரா (மெக்சிகோ) : நேரடி ஒளிபரப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸின் மரணம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலிஸ்கோ மாநிலத்தின் குவாடலஜாராவைச் சேர்ந்த 23 வயது வலேரியா மார்க்வெஸ், அழகியல் நிபுணர் மற்றும் டிக்டாக் பிரபலம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட இவர், 2021-ம் ஆண்டு மிஸ் ரோஸ்ட்ரோ பட்டத்தை வென்றவர். சபோபனில் உள்ள சாண்டா மரியா ஷாப்பிங் மாலில் ‘பியூட்டி ஸ்டுடியோ’ ஒன்றை இயக்கி வந்தார்.
கொலை சம்பவம் எப்படி நடந்தது?
மே 13, செவ்வாய்க்கிழமை அன்று, வலேரியா தனது அழகு நிலையத்திலிருந்து டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது ஸ்டுடியோவிற்கு வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், “நீங்கள் வலேரியா தானே?” எனக் கேட்க, “ஆம்” என அவர் பதிலளித்த பிறகு, உடனே மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சூடு நடத்திய நபர், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், இந்த சம்பவத்தின் முழுக்காட்சியும் டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பாகவே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக, யாரோ ஒருவர் வலேரியாவின் கைபேசியை எடுத்து பார்த்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மறையக்கூடிய விலையுயர்ந்த பரிசு விவகாரம் :
நேரடி ஒளிபரப்பின் தொடக்கத்தில் வலேரியா, தனது பின்தொடர்பாளர்களில் ஒருவரால் விலையுயர்ந்த பரிசு விடுத்து வருகை தரப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், அவர் அப்போது ஸ்டுடியோவில் இல்லாததால் பரிசை பெற முடியவில்லை என்றும், அதற்காக காத்திருக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
குறிக்கோளா உறவு ?
இந்தக் கொலையில் வலேரியாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் வேலாஸ்கோ என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வலேரியா பல ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதைப் பார்த்து, வேலாஸ்கோ அத்திருப்தியடைந்து இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், கொலை செய்தது யார் என்பது தெளிவாக உறுதி செய்யப்படவில்லை.
அச்சத்தில் ஜாலிஸ்கோ மக்கள்:
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜாலிஸ்கோ மாநிலத்தில் 906 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மெக்சிகோவில் கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 6வது இடத்தில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை :
இக்கொலை, பெண்கள் மீது நடைபெறும் வன்முறையின் இன்னொரு வெளிப்பாடாக கருதப்படுகிறது. எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், பெண் பாதுகாப்புக்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.