படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஒரே காரணம் இது தான்” – ‘மிடில் கிளாஸ்’ பட நாயகன் முனிஷ்காந்த்

இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் முனிஷ்காந்த் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் நடிகை விஜயலட்சுமி, முனிஷ்காந்தின் மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முனிஷ்காந்த், “இயக்குனர் கிஷோர் சார் என்னை ஹீரோவாக நடிக்க கேட்டபோது முதலில் மறுத்துவிட்டேன். ஆனால் கதை கேட்ட பிறகு, ‘கதைதான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ’ என்பதை உணர்ந்தேன். அதனால்தான் ஒப்புக்கொண்டேன்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும், “இந்தப் படத்துக்கு எனக்கே ஆச்சரியமாக பெரிய சம்பளம் வழங்கிய டில்லி பாபு சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. திறமையை ஊக்குவிக்கும் இப்படியான தயாரிப்பாளர்கள் தான் சினிமாவுக்கு தேவையென்று நம்புகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படத்தை திரையரங்குகளில் பார்த்து மதிப்பீடு செய்யுங்கள்,” என்றார்.

நடிகை விஜயலட்சுமி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோது, “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே ரசியமான அனுபவம். கிஷோர் சார் அளித்த வாய்ப்புக்கு நன்றி. முனிஷ்காந்த் சார் தவிர இந்தக் கதையை வேறு யாராலும் இவ்வளவு உண்மையாக வெளிப்படுத்த முடியாது. படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் தயாரிப்பாளர் டில்லி பாபு சார் அவர்களின் ஆதரவே,” என்றார்.

Exit mobile version