விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கல்வித் திட்டங்களுக்கு மத்திய அரசு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாகவும், அதை தமிழக அரசு நிராகரித்தது மக்கள் நலனுக்கு விரோதமான முடிவாகவும் அவர் கூறினார்.
“இதே திட்டத்தை இவர்களின் கூட்டணிக் கட்சியான கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். மக்களுக்கு பினராயி விஜயன் காட்டும் அக்கறை முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை,” என்றார்.
இன்றைய காலக்கட்டத்தில் எல்கேஜி மாணவர்கள் கூட மொபைல் போன்களை பயன்படுத்தும் சூழலில், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என நயினார் வலியுறுத்தினார்.
மேலும், விருதுநகர் பகுதியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SIR) பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இதிலேயே பிரச்சினை என்ன? இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, புதிய வாக்காளர்களை சேர்ப்பதே SIR. இதை பெரிய பிரச்னை போல பேச தேவையில்லை,” என்றார்.
அத்துடன், அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சார்-அை குறிப்பிட்ட அவர், “அந்த சாரில் ஒருவர் உட்புறம் இருக்கிறான், இன்னொருவர் வெளியே இருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன் அவரும் உள்ளே சென்று விடுவான்,” என சாடினார்.



















