தரங்கம்பாடி அருகே கண்ணங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வர சித்தி விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் வேள்வி முறைப்படி
வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கண்ணங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தான்தோன்றி வரசித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சித்தி விநாயகர், நீர் நிறை நாதர் ஆகிய கோவில்களில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது
முன்னதாக திருக்குட நன்னீராட்டு விழா செய்வதற்காக கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கோவில் முன் வேள்வி கூடம் அமைக்கப்பட்டு அதில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு நேற்று முதல் கால வேள்வி தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கால வேள்வி நிறைவு செய்யப்பட்டு வேள்வி கூடத்தில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வளம் வந்து விமான கலசத்தை அடைந்தது செந்தமிழ் ஆகம அந்தணர்கள் முதலில் உப தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா செய்து வைத்தனர் அதனைத் தொடர்ந்து தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவில் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
