திருவாரூர் நவம்பர் ,03-திருவாரூர் மாவட்டம்.. வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நீர் தேக்க தொட்டியில்…தொற்று பரவும் அபாயம்..
பொதுமக்கள் கோரிக்கை..
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்..
இந்த நிலையில் அப்பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை தான் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் குடித்து வருகின்றனர்.. மேலும் பள்ளியில் காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு அந்த நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை தான் பயன்படுத்த வருகின்றனர்..
ஆனால் அந்த நீர்த்தேக்க தொட்டியில் மர அட்டை மற்றும் தவளை விஷ பூச்சிகள் விழுந்து.. தொற்று பரவும் அபாயம் உள்ளது..
மேலும் இதுகுறித்து.. அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் பள்ளியில் சுற்று சுவர் இல்லாத நிலையில்.. பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை..என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் என்ற அப்பகுதி இளைஞர் சொல்லும் போது.. ‘பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு முக்கியம்.. என்றும், மாவட்ட நிர்வாகமும் கல்வி துறையும் மனு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை..உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
















