சீர்காழி அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்த கோவிலில் சாமி தாலி மற்றும் உண்டியல் திருட்டு. புதுப்பட்டிணம் போலீசார் விசாரணை!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த 23.ஆலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் குடியிருப்புக்கு அருகாமையில் ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 8 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகம் முடிந்து நிலையில் தினசரி பூஜைகள் நடைபெற்று வந்தது.நேற்று பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்ற நிலையில் இன்று பூஜைக்காக கோவிலை திறக்க வந்த போது கோவிலின் முன் பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கத்தை திருடியதுடன் ஸ்ரீ அழகுமுத்து மாரியம்மன் கழுத்தில் இருந்த 2.5 கிராம் தாலியையும் திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து கிராம மக்கள் சார்பில் புதுபட்டிணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

