கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம். நூற்றக்கணக்கானொர் தீமிதித்து நேர்த்திகடன். ஆயிரக்கணக்கானோர் தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் திருகஞ்சனூர் என்று அழைக்கப்படும் கஞ்சாநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தப்பட்டிருந்த தீமிதி உற்சவம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 3-ஆம் ஆண்டு தீமிதி உற்சவ திருவிழா கடந்த 15-ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு துவங்கியது. மேலத்தெரு, தென்பாதி தெரு, அக்ரஹாரம் கீழத்தெரு, தோப்பு தெரு, கிராமவாசிகள் மற்றும் பொன்னுகுடி, மங்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமவாசிகள் சார்பில் தினந்தோறும் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காவிரிகரையில் இருந்து சக்தி கரகம் மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டது. விரதம் இருந்து காப்பு கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் சக்தி கரகத்துடன் ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தனர். ஆலயத்தின் தென்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்திகரகம் இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவை கிராமமக்கள் கண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தனர்.

Exit mobile version