April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“உலகம் உங்கள் கையில்” திருச்சியில் விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
“உலகம் உங்கள் கையில்” திருச்சியில் விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 18,985 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணி இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தைச் சென்னையில் நேற்று முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், அதன் ஒரு பகுதியாகத் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கி, மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் பேசுகையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்றுவிடாமல் உலகளாவிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்றார். “திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் அரசு ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதற்கட்டமாக 18,985 மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், பின்னர் தனியார் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் விரிவுபடுத்தப்படும்” என்று அவர் விரிவான விளக்கமளித்தார்.

இந்த மடிக்கணினிகள் உயர்தரத் தொழில்நுட்ப வசதிகளுடன், மாணவர்களின் ஆய்வுப் பணிகளுக்கும், வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழாவில் மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், ப. அப்துல்சமது ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் மடிக்கணினிகளை வழங்கினர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, கல்லூரி முதல்வர் அங்கம்மாள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மடிக்கணினியைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், இது தங்களின் உயர்கல்வித் தேடலுக்கும், நவீன காலப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags: distributioneducationFREE LAPTOPscheme Trichystudents
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெண்கள் சக்தி நம் பக்கம் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – எடப்பாடி பழனிசாமி சூளுரை!

Next Post

சோழவந்தான் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ். சோணை பிள்ளையின் 39-வது ஆண்டு நினைவு நாள்

Related Posts

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
Next Post
சோழவந்தான் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ். சோணை பிள்ளையின் 39-வது ஆண்டு நினைவு நாள்

சோழவந்தான் முன்னாள் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ். சோணை பிள்ளையின் 39-வது ஆண்டு நினைவு நாள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.