ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை மன்னார்குடி அருகே ஊர் மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்பவரின் கணவர் ரவிக்குமார் . இவர் இந்திய ராணுவத்தில் 30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் , டெல்லி , இந்திய பாகிஸ்தான் எல்லை , இந்தியா சீனா எல்லை , அருணாச்சல பிரதேசம் , என பல்வேறு இடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் இவர் இந்தியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை சார்பில் இருக்கும் ராணுவ படையில் இந்திய நாட்டின் மூலம் அனுப்பப்பட்டு இஸ்ரேல் நாட்டின் போர் நடைபெற்ற நேரத்திலும் பணியாற்றியுள்ளார். இவரை வரவேற்கும் விதமாக மேல திருப்பாலக்குடி கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மருமகனாக நினைத்து மேல தாள வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்து மேல திருப்பாலக்குடி விநாயகர் கோவிலில் இருந்து அவரை வரவேற்று அவருடைய வீடு வரை அழைத்து சென்றார்கள். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தனர் பின்னர் அவரது மகன் ரெப் ரைட் எனக் கூறி தந்தை ரவிக்குமாருக்கு வணக்கம் செலுத்திய சம்பவம் அனைவரும் மத்தியில் மிகுந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது . மனைவி கனிமொழியும் கணவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார் . கிராம மக்கள் அனைவரும் ஒன்று இணைந்து சால்வை அணிவித்து மகிழ்வித்தனர் மேலும் தங்களுடைய கிராமத்திலும் மாப்பிள்ளை ரவிக்குமார் போல ஒவ்வொரு இளைஞனும் அவரை முன் உதாரணமாக கொண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என தெரிவித்தார்கள் .














