சீர்காழியில் தமிழக வெற்றி கழக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் சீர்காழியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக போட்டியிட்ட மாவட்ட செயலாளர் கோபிநாத் 59149 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார் .தனக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவுகளுக்கு வாக்களித்த வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலை , பெரியார் சிலை காமராஜர் சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தனக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தார் .
