கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமாயணத்தின் தொடர்புடைய மருந்துவாழ் மலை அழைக்கப்படும் மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு பார்வை காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்கு உட்பட்ட கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மருந்துவாழ் மலை இந்த மலையானது பொத்தையாடி பகுதியில் அமைந்துள்ளது, இந்த மலை வரலாற்று சிறப்புமிக்க ஒரு மலையாகும் ராமாயணத்தில் தொடர்பு உள்ள ஒரு மலையாக கருதப்படுகிறது எதிர்த்து போரிட்ட போது லட்சுமணன் காய்மடைந்த போது அவரது காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திர கிரியிலிருந்து இலங்கைக்கு ஹனுமான் சஞ்சீவி மூலிகை கொண்ட பெயர்த்து சுமந்து சென்ற போது அப்போது அதிலிருந்து ஒரு துண்டு இந்த பகுதியில் விழுந்ததாக இன்று வரை நம்பப்பட்டு வருகிறது, அந்த துண்டு தற்போது மருத்துவ மலையாக காட்சியளிப்பதாக சொல்கிறது ஐதீகம் இந்த மழையில் ஸ்ரீ நாராயண குரு தவம் இருந்ததாக கூறப்படுகிறது கேரள மாநிலத்தில் இருந்து பல்வேறு மக்கள் இந்த மலைக்கு அதிக அளவில் ஆன்மீக சுற்றுலாக்கு தினமும் வருவார்கள், அதேபோல ஐயப்ப சீசன் காலங்களில் இந்த மலைக்கு வந்து இங்கிருந்து கன்னியாகுமரிக்கு செல்வார்கள், இந்த மலையானது ஆயிரம் அடி உயரத்திலும் 600-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இந்த மலையானது பறந்து விருந்து காணப்பட்டு வருகிறது இந்த மலை முழுவதுமாகவே மூலிகை நிறைந்த ஒரு மலையாகும், அதேபோல இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் வங்கக்கடல் இந்திய பெருங்கடல் அரபிக்கடல் மூன்று கடலும் பார்க்கக்கூடும் என்பதும் ஒரு பிரத்தேயேகமான ஒன்றாகும், அதேபோல புராணங்களும் இந்த மலையைப் பற்றியும் மலையின் சிறப்புகளையும் அங்கு வாழும் சித்தர்களை பற்றியும் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த பாரம்பரிய மலையின் அடிவாரத்தில் இருந்து தான் இந்த மலையின் செம்மண் மற்றும் பாறைகள் நள்ளிரவில் கடத்தப்பட்டு வருகிறது இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தமிழக முதல்வருக்கும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு புகார் அளித்துள்ளார் இதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றச்சாட்டானது எழுந்துள்ளது, உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு சென்று உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது இது தொடர்பான காட்சிகளை தற்போது நாம் பார்த்து வருகிறோம், அதேபோல இந்த மலைப்பகுதி முழுவதும் உள்ள அடிவாரத்தில் கேளிக்கை விடுதிகள் அதேபோல அடுக்குமாடி கட்டிடங்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது, இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளன, ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டம் கனிம வள கொள்ளை, கனிமவள திருட்டு அரங்கேறி வரும் நிலையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மருந்துவாழ் மலை முழுவதுமாக அழிந்து விடும் சூழல் தற்போது அரங்கேறி உள்ளது இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு சென்று தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தற்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
















