உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத தினமாக மே தினத்தை உண்மையாக உணர்வுபூர்வமாக கொண்டாடும் வகையில் மத்திய மாநில அரசுகள் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டுமென திருவாரூர் மக்கள் கோரிக்கை..
நாடு முழுவதும் வெகு சிறப்பாக உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உழைப்பாளர் சங்கபிரதிநிதிகளும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் மக்களை மதித்து கௌரவிக்கும் வகையில் மே தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தினம்தோறும் நாம் கடந்து செல்லும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் உழைப்பையும் போற்றும் வகையில் சிறப்பாக கொண்டாடப்படும் மே தின திருநாளில் தொழிலாளர் வர்க்கத்தின் இன்றைய நிலைகளை எடுத்துக் கூற வேண்டும்.
ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி அலையும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மத்திய மாநில அரசுகள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் வகையில் மேக் இன் இந்தியா, விஸ்வகர்மா யோஜனா உள்ளிட்ட சுயதொழில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை ஊக்குவித்து வருகின்றது.
தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் திறன்பட செயலாற்றி உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பாளிகளின் தோழனாக அரசு செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்..















