இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடைகள் எடுத்த முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மைசூர் பாக்கின் பெயரை மாற்றி, ‘மைசூர் ஸ்ரீ’ என புதிய பெயர் சூட்டியுள்ளனர் இனிப்பு கடை உரிமையாளர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இந்த ராணுவ நடவடிக்கை உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தாக்குதலை நிறுத்தி கொள்வதாக இரு நாடுகள் அறிவித்தன.
மோதல் நின்றாலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடைகள் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். மைசூர் பாக்கின் பெயரை மாற்றி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.