நாகர்கோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியான கோட்டாறு பகுதியில் வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் உள்ளது. இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தைச் சார்ந்த ஏராளமானோர் வந்து பங்கேற்பது வழக்கம் அந்த வகையில் இன்று
பேராலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலயத்தில் அர்ச்சிக்கப்பட்ட கொடி, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டது. கோட்டாறு குருகுல முதல்வரால் முதல் நாள் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் பெறுகின்றன.
திருவிழாவின் இறுதி நாளான 10 ஆம் நாள் டிசம்பர் 3 அன்று தேர் பவனி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம் அதேபோல இந்த ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

Exit mobile version