மயிலாடுதுறையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வார்டு குறைகளை தெரிவிக்க போதிய நேரம் கொடுக்காமல் சேர்மன் மறுத்ததால் கோப்புகளை மேஜையில் வீசி கோபத்துடன் அமர்ந்த திமுக கவுன்சிலரார் பரபரப்பு ஏற்பட்டது :-
மயிலாடுதுறை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது 29 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரஜினி பேசுகையில் புதிய பேருந்து நிலையத்தில் எந்தவித குத்தகையும் இல்லாமல் தனிநபர் 15 ஆண்டுகளுக்கு மேல் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருவதால் பல கோடி ரூபாய் நகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் நகர் மன்ற உறுப்பினர் ரஜினி தனது வார்டு பிரச்சனை கோப்புகளை மேஜையில் வீசி கோபத்துடன் அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக திமுக கவுன்சிலரே வெளிப்படையாக நகர்மன்ற கூட்டத்தில் கூறிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















