மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனையில் 45 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சியில் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டனர், போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் மறுப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 45 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஏழு மேல் தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஆய்வகம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம் பணி செவிலியர் அறை, மருத்துவர் அறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பொது அறுவை சிகிச்சை புறநானிகளரை தீவிர சிகிச்சை பிரிவு பொது மருத்துவம் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு விரிவான மருத்துவ காப்பீட்டு அலுவலகம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை பார்வையிட்டனர். தற்பொழுது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையிலும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பிரிவுகளில் போதிய டெக்னீசியன்கள் பற்றாக்குறை நிலவுவதால் திருவாரூர் அல்லது தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பும் நிலை உள்ளது. கட்டிடங்களை திறப்பது போல், மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களை நியமனம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
