திருஇந்தளூர் மேலஆராயத்தெருவில் அருள்மிகு ஸ்ரீ மேலமுத்துமாரியம்மன்  கோவிலின் 82-ம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் மேல ஆராயத் தெருவில் அருள்மிகு ஸ்ரீ மேல முத்து மாரியம்மன் கோவிலின் 82 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா:-ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் மேல ஆராயத்தெருவில் அருள்மிகு ஸ்ரீ மேல முத்து மாரியம்மன் ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின் 82 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி விழா துவங்கி திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்த நிலையில் இன்று நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவிரி கரையில் இருந்து மேளதாள வாத்தியங்கள், பறை இசை முழங்க ஊர்வலமாக சக்தி கரகத்துடன் ஆலயத்தை வந்தடைந்தனர். இதில் வாயில் 16 அடி நீள அலகு குத்தியும், அலங்கார காவடி எடுத்தும் வந்த பக்தர்கள் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Exit mobile version