தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ – பத்து ஆக்ஷன் சீன்களுடன் மாஸ் என்ட்ரி ரெடி !

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பை அனிருத் கவனித்து வருகிறார்.

வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, ‘ஜனநாயகன்’ முழுக்க அரசியல் திரைப்படமாக அல்லாமல், அதிரடி காட்சிகளும், அரசியல் நிறைந்த வசனங்களும் கலந்த மாஸ் என்டர்டெய்னராக உருவாகி வருகிறதாம்.

மொத்தத்தில் 10 ஆக்ஷன் சீன்கள் இடம்பெற்றிருப்பதாகவும், விஜய்யின் ஸ்டைல் டயலாக்களும், ஸ்க்ரீன் பிரெசென்சும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

Exit mobile version