தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி முதற்கட்டமாக அறிவித்தார்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி முதற்கட்டமாக அறிவித்தார்.

திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம்.. ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்! விஜய் வாக்குறுதி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று பெண்களுக்கான சில வாக்குறுதிகளை அளித்தார். இதில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி த.வெ.க. சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இதில் சிங்க பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த தவெக தலைவர் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

இதில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணம் ஆகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், தரமான பட்டுப்புடவை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். விஜய் அறிவித்த

மத்திய, மாநில அரசு பதவிகளில் உள்ளவர்களை தவிர மற்ற அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும்.

பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனிக் பட்டம் அமைக்கப்படும்.

உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவில் அறிவிக்கப் போவதாக அவர் மகளிர் முன்னிலையில் அறிவித்தார்

Exit mobile version