சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

சத்தீஸ்கரில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஏழு மாணவர்களை பெட்றோர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர் :-

மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டை பகுதியை சேர்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு பள்ளியில் பயின்ற ஏழு நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சத்தீஸ்கரில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வாகியுள்ளனர். வருகின்ற ஏப்ரல் 2 , 3 , 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் மல்லர் கம்பம் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மயிலாடுதுறையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றியுடன் திரும்பும்படி வாழ்த்துக்களை கூறி வழி அனுப்பி வைத்தனர்.

Exit mobile version