தமிழக அரசு சமீபத்தில் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன. பாடகர் யேசுதாஸ் போன்றோர் எம்.எஸ். சுப்புலட்சுமி அகில இந்திய விருதுகள் பெறுவர்.
விருதுகள் விபரம் :
கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்: 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் + விருது பட்டயம்
அகில இந்திய விருது பெறுவோர்: 1 லட்சம் ரூபாய் பரிசு + 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம்
விருதுகள் வழங்கும் விழா: அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கலைஞர்களை கவுரவிப்பார்.
சினிமா பிரிவில் விருது பெற்றவர்கள் :
2021
எஸ்.ஜே.சூர்யா – நடிகர்
சாய் பல்லவி – நடிகை
லிங்குசாமி – இயக்குநர்
ஜெயகுமார் – அரங்க அமைப்பாளர்
சூப்பர் சுப்பராயன் – சண்டைப் பயிற்சியாளர்
2022
விக்ரம் பிரபு – நடிகர்
ஜெயா வி.சி.குகநாதன் – நடிகை
விவேகா – பாடலாசிரியர்
டைமண்ட் பாபு – செய்தித் தொடர்பாளர்
லட்சுமி காந்தன் – புகைப்படக் கலைஞர்
2023
மணிகண்டன் – நடிகர்
ஜார்ஜ் மரியான் – குணச்சித்திர நடிகர்
அனிருத் – இசையமைப்பாளர்
ஸ்வேதா மோகன் – பின்னணி பாடகி
சாண்டி (சந்தோஷ்குமார்) – நடன இயக்குனர்
நிகில் முருகன் – செய்தித் தொடர்பாளர்
தமிழக சினிமா உலகின் பல திறமையான கலைஞர்கள் இந்த விருதுகளைப் பெற்று பெருமை அடைந்துள்ளனர்.
