விடுதி மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக தொலைபேசி எண் வழங்கப்பட உள்ளது – காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் மிக கவனமாக உள்ளார் – அதே நேரத்தில் நம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதிலும் தெளிவாக உள்ளார் என திருவாரூரில் அமைச்சர் சம்பத் குமார் பேட்டி.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்ததாவது…
பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் சார்பாக இயங்கி கொண்டிருக்கக்கூடிய சமூக நீதி விடுதிகளுக்கு வழக்கமாக ஆய்வு செய்து வருகின்றோம்.. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் வடுவூர் பகுதியில் இருக்கக்கூடிய சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்வதற்காக இன்று வந்திருக்கிறேன். ஆய்வின் அடிப்படையில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுடன் கலந்து பேசி அவங்களுக்கு என்னென்ன தேவைகள், அவர்களின் கோரிக்கைகளை கேட்போம். அவங்களுடைய தேவைகளை அறிந்து அதற்குண்டான செயல்பாடுகளை செய்ய சொல்லி முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு உள்ளார். அதற்குண்டான பணிகள்தான் மேற்கொண்டு இருக்கிறோம். இது தொடர்ச்சியாக நடைபெறும். அது மட்டுமில்லாமல் விடுதி மாணவர்களுக்காக ஒரு தொலைபேசி எண் வழங்கி வருகிறோம். விடுதி உணவு மற்றும் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும். துறை ரீதியான ஏதாவது தவறு நடந்தாலும் நிச்சயமாக அதற்குறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக சட்டசபை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளது குறித்து கேட்டபோது…
தமிழக சட்டசபை தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மாணவர்களின் நலனிலும் எங்களுக்கு அக்கறை உள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று தான் இந்த ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த விடுதியில் ஆய்வுக்கு செல்கிறோம் என்பது இதுவரை சொல்லவில்லை. திடீர் ஆய்வாக தான் மேற்கொண்டு வருகின்றோம். சட்டசபை நடந்தாலும் எங்களது பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என உறுதிப்பட தெரிவித்தார்
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படாதது ஏன் என்ற கேள்விக்கு…
காவேரி விவகாரத்தில் ஏற்கனவே முதலமைச்சர் சொல்லிருக்காங்க. நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் சொல்லி இருக்காங்க. மாநில உரிமைகளை எந்த இடத்துலயும் நாங்க விட்டு கொடுக்க மாட்டோம். நிச்சயமா மாநில உரிமைகளும் விவசாயிகளுக்கு உண்டான தீர்வுகளுக்கும் உண்டான அனைத்து நடவடிக்கையும் துரிதமாக மேற்கொண்டு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அதே சமயத்தில இருமாநில பிரச்சனைகளில் எந்த மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எந்த ஒரு மக்களும் பாதிக்க கூடிய, அங்க இங்க இருக்கக்கூடிய மக்களும் சரி, இங்க இருக்கக்கூடிய நம்ம மக்களும் சரி பாதிக்கப்படாதவாறு எந்த ஒரு முடிவு எடுக்கணுங்கறதுல தெளிவா இருக்காங்க.
அதே சமயத்துல நம்முடைய மாநில உரிமைகளை எந்த இடத்தில விட்டு கொடுக்கறதுக்கு நம்ம அரசு நிச்சயமாக உடன்படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். அதனால் நல்ல ஒரு முடிவை தீர்க்கமாக எடுப்பாங்க என சொல்லி கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக்கழக திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் மதன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.













