அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தமிழ் காமெடி நடிகர்!

அட்லி, தற்போது அல்லு அர்ஜூன் தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

‘ராஜா ராணி’,’தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்து அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய ‘ஜவான்’ படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.

அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஜான்வி கபூரும் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version