‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு, நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்தப் படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இது சூர்யாவின் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வெளியான ‘கருப்பு’ படத்தின் டீசர், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரின் புதிய தோற்றம் மற்றும் படத்தின் மிஸ்டீரியஸ் ஃபீல் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது அடுத்த திரைப்படமான ‘சூர்யா 46’ பற்றிய புதிய அப்டேட் இன்று மாலை 4.06 மணிக்கு வெளியிடப்படும் என, படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“Suriya46 திரைப்படத்தில் வின்டேஜ் சூர்யா காருவை உங்களுக்கு காண்பிக்க ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறோம்!” என்று அவர் பதிவிட்டுள்ளார்
‘சூர்யா 46’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த தகவல்கள் வெளியாகியதும், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டம் நடத்தி வருகிறார்கள்.