2025 -ஆம் ஆண்டிற்கான ஐ .பி.எல் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற இரு அணிகள் சென்னை மற்றும் மும்பை ஆகும். இந்த இரு அணிகளும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது ஆனால் மும்பை அணி தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது.
கடைசியாக சென்னை அணியை தோற்கடித்து புள்ளி பட்டியலில் முன்னோக்கி சென்றது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது 9-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் 23-ம் தேதி மோத உள்ளது. இதற்காக ஐதராபாத் வந்துள்ள மும்பை அணியின் சில வீரர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல உடையணிந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது .
இந்நிலையில் இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவுது மும்பை அணியின் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் இந்த வித்தியாசமான தண்டனையை வழங்கி உள்ளது.