தேசிய அளவில் நடைபெற்ற போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவி 4.22 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்து அசத்தல் :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரணிக்கா இளங்கோவன். விவசாய குடும்பத்தில் இருந்து வந்த இவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய முதல் உள்ளரங்கு தடகள போட்டியில் பங்கேற்று போல்ட் வால்ட் போட்டியில் கலந்து கொண்டு 4.22 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை தேசிய அளவில் 4.21 மீட்டர் தாண்டியது சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது பரணிக்கா அதனை முறியடித்து 4.22 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற வீராங்கனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
